கோவை: இந்து முன்னணியின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கோவில்களை தமிழக அரசு இன்று திறந்ததாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவையில் திறக்கப்பட்ட கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்ரமணியம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தொடர்ந்து ஆலயங்கள் மூடப்பட்டு இருந்ததாகவும் மக்களின் மன நிம்மதிக்காக கோவில்கள் திறக்கப்படவேண்டும் என்று இந்து முன்னணி பல போராட்டங்களை நடத்தியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் கோவில்களுக்கு கட்டுப்பாட்டோடு வந்து செல்வதாக கூறினார்.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் முதியோர்கள் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் தரிசனம் செய்ய தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.