கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று முதல் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று முதல் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, மண்டலங்கள் இடையே பொதுப்போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது. கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. பின்னர் மீண்டும் ஜூலை மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவையை தொடங்க வழிகாட்டு நடைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்தது.

அதன்படி, கோவையில் 50 சதவிகித பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல, அரசு வழிகாட்டு நடைமுறைகளின் படி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் பயணிகள் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க பயணிகளை அனுமதிக்கவும், பயணிகளின் பயன்பாட்டுக்காக பேருந்தில் சானிடைசர் வைக்கவும் வழிகாட்டு நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் சுங்கம், ஒண்டிபுதூர் உள்ளிட்ட பேருந்து பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...