நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும்..! எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் தகவல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.








நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பணி நிமித்தமாக வரலாம் ஆனால், சுற்றுலாவிற்காக யாரும் வரக்கூடாது எனவும் காட்டேஜ்கள், ரிசார்ட்டுகள் திறக்கப்படும் என்றார்.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் எனவும் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பேருந்துகள் இன்று முதல் மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்டு வருவதாகவும் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்கள் பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை என்று கூறிய அவர், இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தாங்களாகவே முன் வந்து பரிசோதனை செய்தால் மட்டுமே அவர்களின் உயிரை காப்பாற்ற முடியும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் தாமதமாக வந்ததால் அவர்களின் உயிரை காப்பற்ற முடியவில்லை என்றார்.

எனவே, அறிகுறியுள்ளவர்கள் உடனே வந்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நேற்று முதுமலை அருகேயுள்ள சிங்கரா வனப்பகுதியில் புலி தாக்கி ஆதிவாசி பெண் பலியானது குறித்து பேசிய அவர், இது ஆட்கொல்லி புலியாக தெரியவில்லை எனவும், அதனை கண்காணிக்க கேமிராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...