பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம்

கோவை: பொள்ளாச்சி, அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் இன்று நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.








கோவை: பொள்ளாச்சி, அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் இன்று நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முதல் கோவில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், பொள்ளாச்சி நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், உள்ளிட்ட இந்து கோயில்களும், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிருமி நாசினி தெளித்து வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.



மேலும், நோய் பரவலைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பலகையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை, பக்தர்களை தெர்மல் ஸ்கேனர் சோதனைக்கு உட்படுத்தபடுவர், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தும், கால்களை நீரில் சுத்தம் செய்ய வேண்டும், கட்டாயமாக முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் கோவிலின் உட்பகுதிகளை தொடக்கூடாது. பக்தர்கள் தேங்காய், பழம், பூ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். கோவில்களில் நடைபெறும் பூஜை, அபிஷேகம் மற்றும் உற்சவங்களின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

திருமணங்கள், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில், ஒரு திருமணம் என்ற முறையில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து, சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற நோய் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவது தவிர்க்க வேண்டும், என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...