தமிழக அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது - கோவையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி

கோவை: தமிழக அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது என்று கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.








கோவை: தமிழக அமைச்சர்களின் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது என்று கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.



முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரணாப் முகர்ஜி நம்முடன் இல்லை என்பது வேதனைக்குரியது. அவரது பொருளாதார சிந்தனைகள் நாட்டிற்கு உறுதுணையாக இருந்தது என்றார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் தமிழகம் அதிக பலன் அடைந்து இருப்பதாக தெரிவித்த அவர், பா.ஜ.கவில் சக்தி கேந்திரா அளவிலான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு தயார் படுத்தும் பணியில் பா.ஜ.க செயல்பட்டு வருகின்றது எனவும் திமுகவில் இருந்து பல சீனியர் தலைவர்கள் பா.ஜ.கவை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர் என்றவர், டிசம்பர் மாதத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வரும் காலம் பா.ஜ.கவின் காலமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும், 2021ம் ஆண்டு பா.ஜ.க வை சேர்ந்த கணிசமான நபர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள் என கூறிய அவர், கூட்டணியை பொருத்தவரை பிரச்சனையும் இல்லை எனவும் பலமாக இருப்பதாக தெரிவித்த அவர், பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டாலும் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சசிகலா சொத்து முடக்கம் சட்டப்படியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது தொடர்பாக வழக்குகள் போட வேண்டும் என்றால் அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு போட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அமைச்சர்கள் பேச்சு கூட்டணியை முறிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது எனவும் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.கவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...