கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று 406 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது, என கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தமிழக அரசு இன்று, செப்டம்பர் 1 முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படாது, என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 406 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல் கட்டமாக கோவையில் 50 சதவீத அரசு பஸ்கள் முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. அதாவது, 406 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.