ஐந்து மாத காலமாக மூடி கிடக்கும் திரையரங்குகள்: பல கோடி ரூபாய் நஷ்டம், பொள்ளாச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை

கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாத காலமாக மூடி கிடக்கும் திரையரங்குகள் காரணமாக, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாத காலமாகமூடி கிடக்கும் திரையரங்குகள் காரணமாக, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நேற்று, தமிழக அரசு ஏழாம் கட்ட கொரோனா ஊரடங்கு குறித்து வெளியிட்ட அறிக்கையில், பல தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில், திரை அரங்குகள் செயல்பட செப்டம்பர் மாதமும் தடை விதித்துள்ளது, மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும் என திரை அரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



பொள்ளாச்சியில் கோவை ரோடு, மார்க்கெட் ரோடு, கிணத்துக்கடவு, கோட்டூர் ரோடு, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 திரையரங்குகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் செயல்படக் கூடாது, என அரசு உத்தரவிட்டது.



இதையடுத்து, சுமார் ஐந்து மாத காலமாக, நாடு முள் உள்ள அனைத்து பொள்ளாச்சியில் உள்ள திரையரங்குகள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது, அரசு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தாடையில் தளர்வுஏற்படுத்தி, நோய் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால்,திரைப்படங்களை வெளியிட முடியாமல் திரைத்துறையிலும் சிக்கல் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு திரையரங்குகளுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதித்து மீண்டும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...