சென்னை: பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு (75) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 4,22,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை தொழிலாளர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
முன்னதாக, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.