கோவை: வால்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை அடங்கிய அம்மா கோவிட் 19 கிட் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவின்படி தமிழகம் முழுவதிலுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அம்மா கோவிட் 19 நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மாத்திரைகள் அடங்கிய கிட் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், வால்பாறையில் சுமார் 15,000 பேருக்கு இந்த கிட் வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அம்மா கோவிட் 19 நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாத்திரை, கையுறை, முகக்கவசம் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவை அடங்கிய கிட் வழங்கப்பட்டது.

வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், கூட்டுறவு நகரவங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது, சுகாதாரநிலைய மருத்துவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.