கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சிறப்பு பூஜைகள்

இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கோவை: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்தனர்.



மலையாள மொழி பேசும் மக்களால் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவு பெறுகிறது. மக்களை தேடி வரும் மகாபலி மன்னனை, வரவேற்கும் விதமாக மலையாளிகள் தங்களது வீட்டு வாசல்களில், அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்தும், பலவகை ருசியான உணவுப் பதார்த்தங்களை சமைத்து உண்டும் மலையாளிகள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்கும் என்பது கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.



கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் வசித்து வருகின்றனர்.இதனால், கோவை மாவட்டத்தில்ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து வருகிறது.அதன்படி இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டு இருந்தார். 



அரசு வழிகாட்டுதல்களின் படி தனிநபர் இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, ஓணம் பண்டிகையை, பாதுகாப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தபட்டு இருந்தது.இந்த நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் அத்தப்பூகோலங்கள் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் குறைந்த அளவிலான நபர்கள் தனிநபர் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு வழிபட்டனர்.



இதேபோல, கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மலையாளிகள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...