தமிழகத்தில் இ- பாஸ் ரத்து:  கோவை தொழில்துறையினர் வரவேற்பு

தமிழகத்தில் இ- பாஸ் ரத்து:  கோவை தொழில்துறையினர் வரவேற்பு

கோவை: தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி இன்று ஏழாம் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிக்கையை வெளியிட்டார், அதில் இ-பாஸ் முறையை ரத்து செய்தும், பொதுப்போக்குவரத்து 

மீீண்டும் துவங்க அனுமதி அளித்துள்ள நிலையில், கோவை தொழில்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் தளர்வுகளுடன் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் இ- பாஸ் ரத்து, மாவட்டத்திற்குள் பஸ்கள் இயக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன, தொழில் நிறுவனங்கள் 100 சதவீதம் ஆட்களுடன் நடத்தலாம் போன்றஅறிவிப்புகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகள், 1.5 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு தொழில்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை தொழில்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெட்கிரைண்டர் தொழில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பம்புசெட் மற்றும் மோட்டார், உதிரிபாகங்கள் தொழில், இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆட்டோ மொபைல் தொழில் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது.

மேற்கண்ட நிறுவனங்களில்10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேக்ட் ஜேம்ஸ் கூறியதாவது:

இ- பாஸ் ரத்து, மாவட்டங்களுக்குள் பஸ் இயக்கம் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பொதுப் போக்குவரத்து மூடக்கத்தால் உள்ளூர் தொழிலாளர்கள் கூட வேலைக்கு வரமுடியாத நிலை இருந்தது. 

அதே சமயம், பிற மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக, பஸ் மற்றும் ரயில் சேவையை மாவட்டங்களுக்கிடையே அனுமதிக்க வேண்டும். தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும், என கூறினார்.

கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக, கோவை உள்ளது. 

இது குறித்து, கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: 

தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில் நலிவடைந்து மிகவும் சிரமம்பட்டு வந்த வேலையில், இந்த அறிவிப்பால் சற்று நம்மதி கிடைத்துள்ளது. எனினும், பஸ் இயக்கங்களின் போது முறையாக சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். வேலைக்கு வரும் தொழிலாளர்கள் எந்த வித கொரோனா பரவல் அச்சமும் இன்றி பணிக்கு வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களில் பயன் இல்லாமல் இருக்கும் பேருந்துகளை கூட அரசு குத்தகைக்கு எடுத்து இயக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சுமார் 70 ஆண்டு கால பாரம்பரிம், கொண்டது கோவையில் உள்ள பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் பெரிய நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...