ஏழாம் கட்ட ஊரடங்கு: தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து. ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.

ஏழாம் கட்ட ஊரடங்கு: தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து. ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.

சென்னை: ஏழாம் கட்ட ஊரடங்கு குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன்படி, 

தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், மாவட்டத்திற்குள் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

புதிய தளர்வுகளில் எதற்கெல்லாம் அனுமதி..? 

ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1 முதல் செயல்பட அனுமதி. 

தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், ஆனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும். நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும். 

அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. 

வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. எனினும் வணிக வளாகங்களில், உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது. 

தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணிவரை இயங்கலாம். டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தவிர்க்க முடியாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.

பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி. 

திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி. 

அரசு அலுவலகங்கள் செப்.1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். வங்கிகள், மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. 

திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி. 

மாநிலங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் அனுமதி. மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்.15 வரை அனுமதி கிடையாது.

இவைகளுக்கு தடை நீடிக்கும்

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படுவதற்கான தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிறுவனங்கள் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கலாம்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...