ஆயில் சர்வீஸ், வாட்டர் வாஸ், வீல் அலைன்மெண்ட் எல்லாம் ரெடி! கோவை கோட்டத்தில் 1019 பேருந்துகள் இயக்க திட்டம்
கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொது போக்குவரத்து இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் இருந்து 1019 அரசு பேருந்துகளை இயக்க, கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு மண்டலங்களில் பொது போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது.

கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மண்டலங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது. அதன் பின், மீண்டும் ஜூலை மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை, பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதனிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொது போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டால், கோவை கோட்டத்தில் இருந்து 1019 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை கோட்டத்தில் உள்ள பணிமனைகளில் உள்ள அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான, பேருந்துகளின் பாராமரிப்பு பணிகள் முடிவடைந்து இயக்க தயார் நிலையில் உள்ளது. அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் 1019 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.