ஊரடங்கின் போது வெளியே வர கூடாது என்று மக்களுக்கு அரசு சொல்லும் அறிவுரை, மது பிரியர்களுக்கு பொருந்தாதா? கோவை மக்கள் கேள்வி
கோவை: கோவையில் ஞாயிறு ஊரடங்கில் சட்ட விரோதமாக, மது விற்பனை நடைபெற்று வருகிறது, எனதொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இன்று கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.
சட்ட விரோதமாக, அக்கடையின் பின்புறமும் வெளியிலும், மது பிரியர்கள், மது பாட்டில்களை, சர்வ சாதாரணமாக வாங்கி செல்கின்ற காட்சிகள், அந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.
அரசின் தளர்வில்லா ஊரடங்கை மதித்து, இன்று ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கல், சிறு வியாபாரிகள், பெட்டி கடைகள், தள்ளு வண்டி கடைகள் என அனைவரும் அவர்களது பணிகளையும், வருமானத்தையும் விடுத்து, வீடுகளில் இருக்க, டாஸ்மாக் கடைகளில், இப்படி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது இவ்விதத்தில் நியாயம்? என்று கோவை மக்கள், வணிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மது வாங்க இப்படி வெளியே வரும் மக்களால் கொரோனா பரவாதா?
ஊரடங்கிலும் டாஸ்மாக், செயல்பட எதேனும் சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டுள்ளதா? யாரும் தேவையில்லாமல் வெளியே வர கூடாது என்று மக்களுக்கு அரசு சொல்லும் அறிவுரை, மது பிரியர்களுக்கு பொருந்தாதா? என்று தொடர்ந்து குரல் எழுப்பியும், இதற்காக தீர்வு இன்னும் கிடைத்தபாடில்லை, என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்.