அஇஅதிமுக அரசின் பணிகளை, பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்

அஇஅதிமுக அரசின் பணிகளை, பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: அஇஅதிமுக அரசின் பணிகளை, கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர் பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும், என பொள்ளாச்சியில் நடைபெற்ற 

ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். 

கோவை: பொள்ளாச்சி -கோவை ரோட்டில் உள்ள அரசு ஆய்வு மாளிகையில், அதிமுக நகர இளைஞர் இளம்பெண் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி சார்பில், ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில்,பொள்ளாச்சியில், மக்களின் நலனுக்காக அரசு மருத்துவமனை புதுப்பிக்கபட்டு, அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

நகராட்சி அலுவலகம், பொள்ளாச்சி தாலுக்கா அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலக கட்டிடங்கள் பலகோடி ரூபாய் செலவு செய்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 170 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கிராம பகுதிகளுக்கும், தரமான தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் கூடிய விரைவில், பொள்ளாச்சி, மற்றும் கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிகளில் உள்ள எல்லா கிராமத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட ஆழியார் தண்ணீர் வழங்க குழாய் பாதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இதுபோன்று, பொள்ளாச்சி பகுதியில், பொதுமக்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள அனைத்து பணிகளையும், தகவல் தொழில்நுட்ப அணியில் உள்ள நிர்வாகிகள், பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

தமிழக மக்கள், தற்போது அதிமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தோப்பு அசோகன், மாநில விவசாய அணி துணை செயலாளர், ராமச்சந்திரன், முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் தாமோதரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...