கோவை: கோவை மதுக்கரை அருகே குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமனாரை கட்டையால் அடித்து மருமகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி வீதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் இவரும் கணேசனுடன் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கணேசன் விக்னேஸ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விக்னேஸ்வரன் அடிக்கடி கணேசனிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 21ம் தேதி மதுபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன் சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து, படுகாயமடைந்த கணேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக கணேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், மருமகன் விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.