பொள்ளாச்சி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் குட்டி மீட்கப்பட்டு வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர், விவசாயி
சிவக்குமார். இவரது நிலத்தில் சுமார் 40 அடி ஆழத்தில் விவசாய கிணறு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று வழி தவறி, சிவக்குமாரின் கிணற்றுக்குள் விழுந்ததுள்ளது.
இந்நிலையில், இன்று கிணற்றுக்குள் தண்ணீரில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புதுறை வீரர்கள் மற்றும் பொள்ளாச்சி வனத்துறை பணியாளர்கள், கிணற்றுக்குள் இறங்கிஒரு மணிநேர போராட்டத்துக்கு, பின்னர் புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர்.
பின்பு, மீட்கப்பட்ட புள்ளி மான் சோமந்துறை, சித்தூர் உதவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சேத்துமடை வனப்பகுதியில்விடுவிக்கப்பட்டது.