கொரோனா பரவலை தடுக்க, கோவை கிராஸ் கட் சாலையில் ஒரு வார காலம் கடைகளை அடைக்க மெர்சண்ட் சங்கத்தினர் முடிவு.

கொரோனா பரவலை தடுக்க, கோவை கிராஸ் கட் சாலையில் ஒரு வார காலம் கடைகளை அடைக்க மெர்சண்ட் சங்கத்தினர்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை,

கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நாளையுடன் ஞாயிறன்று முழு ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், அரசின் அறிவிப்பை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்த நிலையில், கோவை கிராஸ்கட் சாலை, மெர்சண்ட் அசோசியேஷன் அமைப்பினர் இன்று இரவு 7 மணி முதல் 7ம் தேதி காலை 10 மணி வரை வரை ஒரு வார காலதிற்கு கடைகளை அடைக்க முடிவு செய்துள்ளனர்.



இது குறித்து அவ்வமைப்பினர் கூறுகையில்: கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், நலனை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவிற்கு, பொதுமக்கள்ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் உட்பட சுமார் 350 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடை அடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.



வணிக வளாகம் அதிகம் நிறைந்த, கிராஸ் கட் பகுதியில் கடந்த வாரம் பல கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடைகள் மூடப்பட்டது. 

இந்நிலையில், இந்த கடையடைபிற்கு தாமாகமெர்சண்ட் அசோசியேசன் அமைப்பினர் முன் வந்திருப்பது, குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...