கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் துடியலூர் வரை இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன், ஒருபகுதியாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் துடியலூர் வரை இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையம் சந்திப்பில்ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை, சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.
இதனிடையே, மேம்பால பணிகள் காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மேம்பால பணிகள் பாதிப்படைந்துள்ளது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, போக்குவரத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:
கவுண்டம்பாளையம் மேம்பாலபணிகள் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடந்து வருகிறது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்க போக்குவரத்து மாற்றம் அவசியம். அதன், அடிப்படையில் அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வர மட்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். எப்போது, இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்பது பின்னர் அறிக்கப்படும், என்றார்.