37 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் இயக்கம் - மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 37 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன, என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 37 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயக்கப்படுகின்றன, என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் தேதி மாநகராட்சி சார்பாக மண்டலத்திற்கு தலா ஒரு வாகனம் வீதம் 5 மண்டலங்களுக்கு 5 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்களை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண் குமார், கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

அதன்பின், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் 32 சுகாதார நிலையங்களுக்கும் 32 நடமாடும் பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம், நேற்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், மக்கள் வசிக்கும் இடம் அல்லது கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் அப்பகுதிகளுக்கு செல்லும்.

"வாகனங்களில் உள்ள நவீன உபகரணங்கள், கருவிகள் உதவியுடன் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் 37 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன," என்றார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...