தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் - பொள்ளாச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்.
கோவை: பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் முழுவீச்சில் செய்யபட்டு வருவதாகவும், கடந்தாண்டு கால்நடை பல்கலைக்கழகத்தில் பயின்ற 360 மாணவ மாணவிகள், கால்நடை மருத்துவ பணியில் சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலும் 2,500 கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுவதால் தமிழக முதல்வர் ஆலோசனைப்படி, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பூர் மாவட்டம் உடுமலையிலும் கால்நடை மருத்துக்கல்லூரி தொடங்கப்படும், என்று தெரிவித்தார்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், தலைவாசல் பகுதியில் கட்டப்பட்டு வரும் கால்நடை பூங்கா பணிகள் 70% நிறைவு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுவதால், காலியாக உள்ள இடங்களில் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள், என்றும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், தெரிவித்தார்.