பண மோசடி வழக்கில் கோவை காங்கிரஸ் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கைது

பண மோசடி வழக்கில் கோவை காங்கிரஸ் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கைது

கோவை: கோவையை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் 

ஹரிஹரசுதன் (35) என்பவரை பண மோசடி வழக்கில், கர்நாடக போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும், இவர் ஆன்லைன் மூலம் ஜவுளி வர்த்தகம் செய்து வந்துள்ளார். இவரை, தொடர்பு கொண்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஜவுளி வர்த்தகம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. 

அவருக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்கள் வாங்கித் தருவதாக, ஹரிஹரசுதன் உறுதியளித்ததாகவும், இதற்காக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் ரூ.10 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

பின், பணத்தை பெற்று கொண்ட ஹரிஹரசுதன், நீண்ட நாட்கள் ஆகியும் ஜவுளிப் பொருட்களைஅனுப்பமால் இருத்ததாகவும், இதுகுறித்து அந்த நபர் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதால் பொருட்களை, தற்போது வழங்க முடியாது, என தெரிவித்துள்ளார். 

தொடர் தாமதத்தால், பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு ஹரிஹரசுதன் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில், நேற்று கோவை வந்த கர்நாடகா போலீசார் ஹரிஹரசுதனை கைது செய்து, காசோலை மோசடி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை கைது செய்து கர்நாடகா அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...