கோவையில் கொரோனா பரிசோதனை முடிவுகளில் தாமதம்; போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, இறப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை - எம்எல்ஏ,நா.கார்த்திக்

கோவையில் கொரோனா பரிசோதனை முடிவுகளில் தாமதம்; போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, இறப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை - எம்.எல்.ஏ, நா.கார்த்திக்

கோவை: கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் இன்று பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது எனவும், இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், கோவையில் தினமும் 10 முதல் 12 பேர் உயிரிழக்கின்றனர் எனவும், கொரோனா பரிசோதனை முடிவுகள் தாமதமாக வழங்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். 



கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில், அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது எனவும் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளை அரசு மூடி மறைக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிட வேண்டும் என கூறிய அவர், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.

கோவையில், கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை எனவும் இஎஸ்ஐ மருத்துவமனையில் போதுமான கொரோனா நோய் சம்பந்தபட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லை, என அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு, மருந்துகள் தருவதில்லை எனவும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்யவில்லை, எனவும் அவர் தெரிவித்தார். 



கோவையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சோதனை தொழில் நிறுவனத்தினர் மற்றும் வணிகர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலயில், பொருளாதார பாதிப்பால் சிக்கி தவிக்கும் நிலையில் அந்நிறுவனங்கள் பரிசோதனை செய்ய முடியாது, எனவும் அவர் கூறினார். 

ஊரடங்கு, முறையாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை எனவும் பிளிச்சிங் பவுடர், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன எனவும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா ஒழித்த உத்தமரே என போஸ்டர் அடித்த அமைச்சர், கொரோனா தொற்றை கட்டுபடுத்த தவறிவிட்டார், எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், வசந்தகுமாருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...