பொள்ளாச்சியில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள, தொலைபேசி எண் அறிவிப்பு

பொள்ளாச்சியில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ள, தொலைபேசி எண் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், வருவாய்த் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில், பொள்ளாச்சியில் மூன்று குழந்தைகள் உட்பட 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோட்டூர் ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாச்சிமுத்து பிரசவ விடுதி, தனியார் திருமண மண்டபம் என,கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 600 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைகளுக்கு செல்ல பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

எனவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வைரஸ் தடுப்பு மையத்திற்கு 04259 224855 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும். பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்களை அளித்தால், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேரடியாக இருப்பிடத்திற்ககே வந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள், என்று சார் ஆட்சியர், வைத்தியநாதன், அறிவிப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...