இரவு நேரங்களில் குடிபோதையில் ஆட்டம் பாட்டம், பாட்டில் உடைப்பு என சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கோவை சக்தி நகர் பாலம்
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே உள்ள சக்தி நகர் பாலத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு குடிபோதையில், ஆட்டம் பாட்டம் மற்றும் பாட்டில் உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
கோவை வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில், ரயில் மேம்பாலம் அருகே கே.ஆர். நகர் பகுதி உள்ளது. இந்த நகரில் ஒருபுறம் கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவைக்கு தண்டவாளமும், மறுபுறம் கெளசிகா நதியின் கிளை ஒடையும் செல்கிறது.

இந்த ஒடை கே.ஆர் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள சக்தி நகர் வழியாக செல்வதால், சக்தி நகர் செல்ல அங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆள் நடமாட்டம் குறைவு, அருகில் சில மீட்டர்கள் தூரம் வரை வீடுகள் இல்லை என்பதால் இரவு நேரங்களில் திறந்தவெளி பார் போல் சமூக விரோதிகள் அப்பகுதியில் மது அருந்தி செல்கின்றனர்.

அவர்கள் மது அருந்தி விட்டு குடிபோதையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், என இருந்து விட்டு சாலையில் சில சமயங்களில் பாட்டில்களையும் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதுதவிர, அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்திலும் அமர்ந்து மது அருந்துகின்றனர் என்று அங்குள்ள பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, சமூக விரோதிகள் அதிகமாக அங்கே கூடுவதால் இப்பகுதிகளில், திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. சக்தி நகர், கே.ஆர் நகர், இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர், இரவு நேர ரோந்தை இவ்வழியாக தீவிரப்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.