அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, கோவை பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைகழங்களில் 650 படுக்கை வசதி அமைக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 650 படுக்கைகளுடன், பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைகழங்களில் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, 650 படுக்கைகளுடன், பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைகழங்களில் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலாக, பாரதியார் பல்கலைக்கழக விளையாட்டு விடுதியில் சுமார் 450 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழக மண்டல மாணவர் விடுதியில் சுமார் 200 படுக்கைகளுடனும் கோவிட் கேர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவை தவிர, கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் இதுவரை 13,358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...