சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுயநினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி-க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல, அவர் சுயநினைவுடனும், சொல்வதைப் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளதாகவும் அவர் நினைவுடனும் சிறிய அளவிலான பிசியோதெராப்பியும் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது உடல்நிலையை மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.