கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று மாலை, சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று மாலை, சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் (70), கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, இன்று மாலை அவர் உயிர் பிரிந்தது.