கோவை: வால்பாறையில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் அணை 110 அடியை எட்டியுள்ள நிலையில், அணை பகுதி மற்றும் வால்பாறையில் மழை பொழிவு நின்றதால், முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. சுமார் 3.25 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம், ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, வேட்டைக்காரன்புதூர் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

மேலும், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர், என சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த 8 மாத காலமாக 60 அடிக்கும் கீழ் இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் கடந்த, ஜூலை மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கிடுகிடு என உயர்ந்தது. இதனால், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, 100 அடியை கடந்தது.
தொடர் மழையால், ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது பருவமழை நின்றதால், அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

நேற்றைய, நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 605 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 411 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் நீர் மட்டம் 110.15 அடியாக இருந்தது.
ஆண்டுதோறும் ஆழியார் அணை நிரம்பும்போது, அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் வீணாக திறந்துவிடப்படுகிறது. இதனால், வறட்சி காலங்களில் விவசாயிகள் நிலத்தடி நீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த ஆண்டு ஆழியார் அணையின் உபரி நீரை வீணடிக்காமல் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களை நிரப்ப, முன்கூட்டியே அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.