தனியார் கடை பணியாளர்கள் இலவச மருத்துவ முகாம்களில் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்; மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் மற்றும் கொரோனா முகாம்களில், தனியார் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் மற்றும் கொரோனா முகாம்களில், தனியார் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தது, 10 நாட்களுக்கு ஒருமுறை கடை உரிமையாளார்கள், தங்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டியிருந்தது.

இதற்கு வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மாநகராட்சி சார்பில் அருகில் நடக்கும் மருத்துவ முகாம்களில் இவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும், என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறியதாவது:

கோவை மாநகராட்சி சார்பாக தினமும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், இலவச மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. இந்த முகாம்களின் நோக்கமே கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிவது தான். இதில், அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கடைகள், பெரு நிறுவனங்கள், அலுவலகங்கள், என அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பாக அப்பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன..ஆனால், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் என பலரும் அங்கு வந்து கலந்துகொள்ளவில்லை. கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கடை அடைக்கப்படும், மற்றும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பயந்து மருத்துவ முகாம்களை அலட்சியம் செய்தனர்.

இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனியார் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறை கடை உரிமையாளார்கள், தங்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்னுடைய நோக்கம் அவர்களை செலவு செய்ய வைக்க வேண்டும் என்பது அல்ல. அவர்கள் அருகில் நடக்கும் மருத்துவ முகாம்களில் தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும், என்பதே.

இல்லையென்றால், தனியார் ஆய்வகங்களில் ‘பூல்’ டெஸ்ட் செய்ய வேண்டும். இதற்கு ரூ.1000 வரை மட்டுமே செலவாகும். கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கடையில் உள்ளவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது, என கடை உரிமையாளர்களே கண்டறிந்து தெரிவித்தால் நன்று. இல்லை என்றால் நாங்களாக கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...