கோவை: ஊரடங்கு விதியை மீறி சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு, நேற்று அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதால் 4 பிரிவுகளில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு.
கோவை: ஊரடங்கு விதியை மீறி சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு, நேற்று அண்ணாமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதால் 4 பிரிவுகளில் காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு.
கோவை காந்திபுரம் பகுதி வி.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு, நேற்று புதிதாக பாஜக உறுப்பினராக சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை வந்ததை தொடர்ந்து, அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை, மணிமடுடத்துடன் பாஜக சார்பில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி, மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில பொதுசெயலாளர் ஜி.கே.செல்வகுமார், பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டது.
எனவே, ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் சேர்த்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக, அண்ணாமலை உட்பட நந்தகுமார், ஜி கே செல்வகுமார், எஸ் ஆர் சேகர், கனகசபாபதி ஆகியோர் மீது காட்டூர் காவல்துறையினர் 5 பிரிவின் (ஊரடங்கு விதி மீறல், ஐபிசி செக்சன் 143, 341, 269, 285) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.