கோவை ஏசிசி சிமெண்ட் விவகாரம்: முற்றுகையில் ஈடுபட்ட பெண்ணை வீட்டிற்குள் சென்று தாக்கியதால் பரபரப்பு

கோவை: கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக கூறி, அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அந்த சிமெண்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை: கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக கூறி, அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் அந்த சிமெண்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதை தொடர்ந்து, அவர்களிடம், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். புகை வெளிவருவதை தடுக்க, தகுந்த நடவடிக்கைகள், எடுக்கப்படும் என்றும் அந்த சிமெண்ட் நிறுவனம் கூறியதன் அடிப்படையில் முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை குரும்பபாளையம் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி என்ற பெண்ணை யுவராஜ், கணேசன், ராஜாஜி என்ற மூன்று நபர்கள், வீட்டிற்குள் சென்று தகாத வார்த்தை பேசி அவரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அதில், காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரிசி பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



அதனை, தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த மூன்று நபர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுக்கரை காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையம் முன்பு திரண்ட பெண்கள், இந்த மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் வரை, இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம், என்று அங்கேயே காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...