கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்; தேதிகளை மாற்றி கொள்ளலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புது டெல்லி: கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் தேர்வுகளை தள்ளி வைக்கலாம், ஆனால், கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது
எந்த சூழ்நிலையிலும், தேர்வு நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா பரவலால், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இறுதி பருவத் தேர்வை தவிர மற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விட்டன. ஆனால், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யுஜிசி அறிவித்தது.
இந்த சூழலில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தனர். அதில், கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.