கோவை மாவட்டத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பில் புதிதாக  பேர் சேர்ந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பில் புதிதாக 13,558 பேர் சேர்ந்துள்ளனர்.

கோவை: ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கோவை மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை புதிதாக 13 ஆயிரத்து 558 பேர் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 

மத்திய அரசின் கீழ், செயல்படுத்தப்படும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 379 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு இந்த பணி நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மார்ச் முதல் மே மாதம் வரையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில், அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக ஜூன் முதல் மீண்டும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் துவங்கியது. 

இதனிடையே, ஊரடங்கிற்கு பின் நூறு நாள் வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், தினமும் சராசரியாக 20 முதல் 25 ஆயிரம் பேர் வரை நூறு நாள் வேலைக்கு வருகின்றனர். இந்தாண்டு, இதுவரை 1.18 லட்சம் பேர் வேலைக்கு வந்துள்ளனர். 

இதில், இதுவரை புதிதாக 13 ஆயிரத்து 558 பேர் நூறு நாள் வேலை வாய்ப்பு அட்டை பெற்றுள்ளனர். கொரோனா காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து தினக் கூலிகளாக செல்பவர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில், உள்ளூர் வேலை வாய்ப்பை கிராமப்புற மக்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர். 

ஊரகப் பகுதிகளில், நூறு நாள் வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகத்திலே அட்டை வழங்கப்படுகிறது, என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...