நீலகிரி: உதகை தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் இன்று கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ்கள் ஆன்லைன் வலைதளம் மூலம் வழங்குவதற்காக தேசிய தகவலியல் மையம் மூலம் உருவாக்கப்பட்ட வளைதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் இன்று (27.08.2020) கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ்கள் ஆன்லைன் வலைதளம் மூலம் வழங்குவதற்காக தேசிய தகவலியல் மையம் மூலம் உருவாக்கப்பட்ட வளைதள சேவையை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., முன்னிலையில் முதன்மை செயலாளர்/தலைமை செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்து பொது மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தினை முதன்மை செயலாளர்/தலைமை செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாவு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.08.2020) பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வி.சசிமோகன் இ.கா.ப., உதகை உதவி ஆட்சியர் டாக்டர். மோனிகா ரானா இ.ஆ.ப.., உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.