ஒணம் பண்டிகைக்கு பூக்கள் கொண்டு வர கேரளா அரசு தடை எதிரொலி: ரூ.5 கோடி வரை கோவையில் பூக்கள் வர்த்தகம் பாதிக்கும் என விவசாயிகள் கவலை

கோவை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை, போல கேரளாவில் ஒணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.











கோவை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை, போல கேரளாவில் ஒணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.



இந்தாண்டு, ஒணம் பண்டிகையானது வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் கடந்த ஆண்டுகளில் கொண்டாடியது போல், இந்தாண்டு கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும், என கேரளா அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கேரளாவை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதனால், இந்த மாவட்டங்களில் ஒணம் பண்டிகையை,ப்முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர்.

ஒணம் பண்டிகைக்கு, தமிழகத்தில் இருந்து தான் கேரளாவிற்கு அதிக அளவில் பூக்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. 



குறிப்பாக, கோவை, திண்டுக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பூக்கள் அனுப்படும். ஆனால், இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு பூக்கள் கொண்டு வரப்படக்கூடாது, என கேரளா அரசு தடை விதித்துள்ளது.

இதனால், கோவை மாவட்டத்தில் ஒணம் பண்டிகை ஒட்டி பூக்கள் சாகுப்படி செய்த விவசாயிகள் நிலைமை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியாதவது:

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சாமந்தி, மல்லிகை, தாமரை, வாடா மல்லி, லில்லி, பொட்டு மல்லி என பல்வேறு வகையான பூக்கள் ஒணம் பண்டிகையை ஒட்டி சாகுப்படி செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக, தமிழகத்தில் இருந்து 2000 டன் பூக்கள், கேரளாவிற்கு ஒணம் பண்டிகையை ஒட்டி அனுப்பப்படும். அதே போல் முட்டைகோஸ், கேரட், உருளை, என காய்கறிகளும், என சுமார் ரூ.300 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.

ஆனால், இந்த ஆண்டு கேரளா அரசின் அறிவிப்பால், இந்த வர்த்தகம் முழுவதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவையில் பூ வியாபாரிகள் ஒணம் பண்டிகை பெரிதும் எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில், கேரளா அரசின் தடையால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லக்கூடிய ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.

எனவே, கேரளா அரசிடம், தமிழக முதல்வர் பேசி இந்த தடையை நீக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். பூக்கள் உற்பத்தி செய்த செலவையாவது, விவசாயிகளுக்கு கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...