கோவையில் சூயஸ் நிறுவன ஊழியர்களை சிறைபிடித்த பொதுமக்கள்..! கடும் எதிர்ப்பால் தோண்டப்பட்ட சாலை மூடல்!

கோவை: குடிநீரை வணிகமயமாக்கும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என எஸ்ஐஎச்எஸ் காலனியில் குழாய் பதிக்கும் பணிக்கு வந்த சூயஸ் நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குடிநீரை வணிகமயமாக்கும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என எஸ்ஐஎச்எஸ் காலனியில் குழாய் பதிக்கும் பணிக்கு வந்த சூயஸ் நிறுவன ஊழியர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரத்தில் உள்ள நூறு வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனம் மேற்கொள்ள கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டு உள்ளது.

இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகளும் இத்திட்டம் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால் உடனடியாக சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோவை மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சூயஸ் நிறுவனமும் ஆங்காங்கே குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ஒண்டிபுதூர் அடுத்த எஸ்ஐஎச்எஸ் காலனியில் சூயஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களோடு குழாய் பதிக்கும் பணிகளுக்காக வந்து சாலையை தோண்ட ஆரம்பித்தனர்.

அப்போது, ஆரம்பத்தில் மாநகராட்சி ஊழியர்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்த பொதுமக்கள், பின்னர் இது சூயஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என்பதையறிந்து அவர்களை பணி செய்யவிடாமல் சிறைபிடித்தனர். மேலும் தோண்டிய சாலையை மீண்டும் மூடாமல் விடமாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர்.



இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், பொதுமக்கள் சூயஸ் நிறுவனத்தை அனுமதிக்க முடியாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தோண்டிய சாலை மீண்டும் மண் போட்டு மூடப்பட்டது.



சூயஸ் நிறுவனம் பொக்லைன் இயந்திரம் மற்றும் ஊழியர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...