பால்‌ உற்பத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மதிய உணவு திட்டத்தில்‌ பால்‌ வழங்குவதை சேர்க்க வேண்டும்‌ - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

கோவை: தமிழகத்தில்‌ ஆவின்‌ மற்றும்‌ தனியார்‌ பால்‌ நிறுவனங்கள்‌ விவசாயிகளிடம்‌ இருந்து பால்‌ கொள்முதல்‌ அளவை குறைத்துக்‌ கொண்டதால்‌, பால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ விவசாயிகள்‌ வாழ்வாதாரத்தை காக்க பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில்‌ பால்‌ வழங்குவதை மாநில அரசு சேர்க்க வேண்டும்‌ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை: தமிழகத்தில்‌ ஆவின்‌ மற்றும்‌ தனியார்‌ பால்‌ நிறுவனங்கள்‌ விவசாயிகளிடம்‌ இருந்து பால்‌ கொள்முதல்‌ அளவை குறைத்துக்‌ கொண்டதால்‌, பால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ விவசாயிகள்‌ வாழ்வாதாரத்தை காக்க பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில்‌ பால்‌ வழங்குவதை மாநில அரசு சேர்க்க வேண்டும்‌ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில்‌ பசுமை புரட்சியையும்‌ (விவசாயம்‌), வெண்மை புரட்சியையும்‌ (பால்‌ உற்பத்தி) செயல்படுத்தியது காங்கிரஸ்‌ அரசு. சிறு, குறு விவசாயிகள்‌ பால்‌ உற்பத்தியில்‌ ஈடுபட ஆரம்பகாலம்‌ முதல்‌ காங்கிரஸ்‌ அரசு ஊக்கத்தை ஏற்படுத்திக்‌ கொடுத்திருக்கிறது.

இதன்‌ காரணமாகவே, தமிழகத்தில்‌ பால்‌ உற்பத்தி தொடர்ந்து பெருகி வந்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில்‌ சுமார்‌ 40 லட்சம்‌ விவசாயிகள்‌ கறவை மாடுகளை வளர்த்து பால்‌ உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர்‌. இதன்‌ மூலம்‌ ஒரு நாளைக்கு 2 கோடி லிட்டர்‌ பால்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில்‌ 1.76 கோடி லிட்டர்‌ பால்‌ விற்பனைக்கு வருகிறது.

உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு நிறுவனமான ஆவின்‌ மற்றும்‌ பல்வேறு தனியார்‌ பால்‌ நிறுவனத்தார்‌, பால்‌ கொள்முதல்‌ செய்கின்றனர்‌. ஆவினில்‌ ஒரு லிட்டருக்கு ரூ.24 முதல்‌ ரூ.27 வரையில்‌ பால்‌ கொள்முதல்‌ செய்யப்படுகிறது. இதுவே தனியார்‌ நிறுவனத்தில்‌ ரூ.30க்கு பால்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு வந்தது.

இந்த குழலில்‌ கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பால்‌ கொள்முதலில்‌ ஆவின்‌ மற்றும்‌ தனியார்‌ பால்‌ நிறுவனங்கள்‌ தங்களின்‌ கொள்முதல்‌ அளவை வெகுவாக குறைத்து விட்டன. ஆவின்‌ நிறுவனம்‌ தினசரி மேற்கொண்டு

வந்த 37 லட்சம்‌ லிட்டர்‌ பால்‌ கொள்முதல்‌ அளவை தற்போது 31 லட்சம்‌ லிட்டராக குறைத்துவிட்டது.

அதாவது ஒவ்வொரு பால்‌ கூட்டுறவு சங்கத்திலும்‌ ஆவின்‌ நிறுவனம்‌. 15 சதவீதம்‌ முதல்‌ 30 சதவீதம்‌ வரை பால்‌ கொள்முதல்‌ அளவை குறைத்து, பால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை சீர்குலைத்து உள்ளது. தனியார்‌ நிறுவனத்தார்‌ பால்‌ கொள்முதலை குறைத்ததோடு, விலையையும்‌ சரி பாதியாக குறைத்து ஒரு லிட்டர்‌ பாலுக்கு ரூ.15 தான்‌ வழங்குகிறார்கள்‌.

மாநிலம்‌ முழுவதும்‌ இத்தகைய நிலை இருக்கிறது. குறிப்பாக சேலம்‌ மாவட்டத்தில்‌ ஓமலூர்‌, காடையாம்பட்டி, தாரமங்கலம்‌, இடைப்பாடி, ஆத்தூர்‌, கெங்கவல்லி உள்ளிட்ட ஊர்களிலிருந்து பால்‌ கொள்முதலை ஆவின்‌ நிர்வாகம்‌ குறைக்கக்‌ கூடாது என விவசாயிகள்‌ கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ உற்பத்தியாகும்‌ பாலை உரிய விலைக்கு விற்க முடியாமலும்‌, கால்நடைகளுக்கு தீவனம்‌ கொடுத்து வளர்க்க முடியாமலும்‌ பால்‌ உற்பத்தியாளர்கள்‌ பெரும்‌ இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்‌. எனவே பால்‌ உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனில்‌, பால்‌ உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக மாநில அரசு உதவிட வேண்டும்‌. இதற்காக பால் உற்பத்தியாளர்களின்‌ தற்போதைய கோரிக்கையான மாதத்திற்கு ரூ.10,000 நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்‌, பால்‌ உற்பத்தியாளர்களின்‌ வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பாதுகாத்திட தமிழக அரசின்‌ பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில்‌ பால்‌ வழங்குவதை செயல்படுத்த வேண்டும்‌. இந்த திட்டம்‌ செயல்படுத்தப்பட்டால்‌, தினமும்‌ உற்பத்தியாகிற முழு அளவு பாலையும்‌ அரசால்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்தான ஆகாரமாக பால்‌ வழங்கிட இயலும்‌.

எனவே, பால்‌ உற்பத்தியாளர்களான விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்‌, மாணவர்களுக்கு சத்தான ஆகாரம்‌ வழங்கவும்‌ மதிய உணவு திட்டத்தில்‌ பால்‌ வழங்குவதை செயல்படுத்த வேண்டும்‌ என மாநில அரசிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...