பொள்ளாச்சி - திண்டுக்கல் 4 வழி சாலை அமைக்கும் பணி தொடக்கம்; விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறை

கோவை: பொள்ளாச்சி - திண்டுக்கல் 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி - திண்டுக்கல் 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் இருந்து திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல பொள்ளாச்சி ஒரு முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. இரண்டு வழி சாலையாக இருந்த, இந்த வழித்தடத்தில், தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், இதற்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2016ம் ஆண்டு பொள்ளாச்சி - கோவை ரோடு நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அது முடிவடைந்து, தற்போது, பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரையில், நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள், கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தொடங்கப்பட்டது. இதற்காக, பொள்ளாச்சி கோவை ரோடு, சேரன் நகர் பகுதியில் இருந்து, சக்தி மில் வரையிலும், மரங்கள் வெட்டும் பணி, தற்போது தொடங்கி உள்ளது.

இதில், முதல்கட்டமாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை உள்ள 25க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட உள்ளன. இதை தொடர்ந்து, தார் ரோடு விரிவு படுத்தும் பணி முழு வீச்சில் நடக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தெரிவித்தனர்.

இதனிடையே, பொள்ளாச்சி கோவை ரோடு விரிவாக்க பணியின் போது, 1000 கணக்கான பழமையான மரங்கள், வெட்டப்பட்டது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் மத்தியிலும பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.



தற்போது, இந்த புதிய சாலையை விரிவாக்கம் செய்ய, ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது. சாலை விரிவாக்க பணியின் போது, இடையூறு இல்லாத மரங்களை வெட்ட கூடாது என்றும், மரங்கள் வெட்டுவதற்கு ஈடாக, அரசு புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...