கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் அருகேயுள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது ஒன்றரை வயது குழந்தை மலர்விழிக்கு, கடந்த 18ம் தேதி நிலக்கடலை சாப்பிடும் போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தைக்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்த்ததில், மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டு, காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உள்நோக்கு கருவி மூலம் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலையை அகற்றினர்.
இது குறித்து மருத்துவர்கள் பேசுகையில், "மூச்சுக்குழாய் அடைப்பை சரிசெய்யாமல் இருந்திருந்தால், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் எனவும் குழந்தையின் மூச்சுக்குழாயின் விட்டம் 5 மி.மீ. அளவில்தான் இருக்கும் என்றும், உணவுப் பொருள் அடைத்தபின் சிறுகற்கள் போன்றவற்றை குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்", என்றனர்.
மேலும், இயல்பாக உள்ள குழந்தைக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டால், மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.