கோவை: பொள்ளாச்சியில் எஸ்.பி.ஐ வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பதை, சுகாதாரத்துறை உறுதி செய்ததையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் ஒருவருக்கு, கொரோனா நோய் அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டது. பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பதை, சுகாதாரதுறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து, அந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், என சுமார் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வங்கியை மூடவும் சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, எஸ்.பி.ஐ வங்கி அலுவலகம் இன்று முடப்பட்டது.
பின்னர், நகராட்சி தூய்மை பணியாளர்கள், மூலம் வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அங்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பரிசோதனை நடைபெற்று வருகிறது.