கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கடை, நிறுவனங்கள், அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும், என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களுக்கு தரப்பட்டுள்ள அறிக்கையில், "தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியம் பணியாளர்களுக்கு கடை உரிமையாளர்கள் உடனடியாக தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை எடுத்து, அதற்குறிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வின் போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். அதே போல், பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும். இது தவறும், பட்சத்திலும் கடைகள் உள்ளிட்டவை பூட்டி சீல் வைக்கப்படும்," என கூறப்பட்டுள்ளது.
இந்த தீடீர் அறிவிப்பால், வணிகர்கள் கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அடைந்துள்ளனர். கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, தனியார் ஆய்வகங்களில் ஒவ்வொரு முறையும், எவ்வாறு கட்டணம் செலுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே, கொரோனாவால் வருமானம் பாதிக்கப்பட்டு, தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வரும் வணிகர்கள், எப்படி 10 நாட்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இயலும்? அதுவும் தனியார் பரிசோதனை மையத்தில், இது சாத்தியமில்லை. என வணிகர்கள், வேதனை தெரிவித்துள்ளனர்.