கோவை: பேராசிரியர் கனகசபாபதி அவர்கள், பேரூர் ஆதினம் திருபெருந்திரு மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்து புதிய கல்வி கொள்கை குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, ஏராளமான கல்வி நிறுவனங்களையும் தலைமையேற்று நடத்தி வருபவர் என்ற வகையில் அடிகளார் அவர்கள் புதிய கல்வி கொள்கை சிறப்பானதாக அமைந்திருப்பதாக அதனை வரவேற்றார்.
அதேபோல, புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான அடிப்படையாகவும், பிரதமர் மோடி அவர்களின் தொலை நோக்கு திட்டங்களின் வெளிப்பாடாகவும் இந்த கல்விக் கொள்கை அமைந்திருப்பதாக அடிகளார் அவர்கள் பாராட்டினார்.
மொழிக்கொள்கை, மொழிக்கல்வி மற்றும் தமிழ் போன்ற பிராந்திய செம்மொழிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஆகியவை குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்த அடிகளார் அவர்கள், புதிய கல்விக்கொள்கை வரைவு திட்டத்தில் கல்வி முறையை சீரமைப்பதற்கான முழுமையான அணுகுமுறை காணப்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அம்சங்களான புத்தக பை இல்லாத தினங்கள் மூலம் கற்றல் மற்றும் கல்வி சூழல் மகிழ்ச்சியானதாக மாற்றப்படும் எனவும், தொழில் பயிற்சி போன்ற அம்சங்கள் குழந்தைகளை இளம் வயதிலிருந்தே சிறப்பாக உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்.
மேலும், திருபெருந்திரு அடிகளார் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள வலிமையான தலைமை மீதும், பிரதமரின் சீரிய தலைமையினால் புத்தெழுச்சி பெரும் பாரதத்தின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும், அவரது மேலான ஆசிகளுக்காகவும் பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.