கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 55 ஊராட்சிகளுக்கு ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டன.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 55 ஊராட்சிகளுக்கு ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டன.
இந்த கட்டிடங்கள் தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளுக்கு சொத்துக்களை உருவாக்கும், நோக்கத்தில், தமிழகம் முழுவதும் 1000 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கட்டிடத்திற்கு ரூ.70.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் 55 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வரவேற்பு அறை, விழா அறை, அரங்க மேடை, இரண்டு தனித்தனி அறைகள், மற்றும் கழிப்பறை வசதிகளுடன் தரைதளமும், சமையல் அறை, உணவுக் கூடத்துடன் கூடிய முதல்தளமும் அமைக்கப்படுகிறது. தரைதளம் 3,200 சதுர அடியிலும், முதல்தளம் 1,800 சதுர அடியிலும் அமைக்கப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊராட்சிகளுக்கு வருவாய் வரக்கூடிய சொத்துக்களை உருவாக்கும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இக்கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, குறைந்த வாடகையில் அரசுத் துறைகள், பொது மக்கள், தனியார் நிறுவனங்களின் விழாக்கள், கூட்டங்கள் நடத்திட வாடகைக்கு விடப்படும்.
பொருளாதாரத்தில், பின்தங்கியுள்ள மக்கள் தங்கள் வீட்டு விழாக்கள் நடத்துவதற்கு இக்கட்டிடங்கள் உதவியாக இருக்கும். பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையான வசதிகளுடன், இக்கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது.
இதிலிருந்து கிடைக்க பெரும் வருவாய், அந்தந்த ஊராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும்.தற்போது 10 கட்டிடங்களில் 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதம் உள்ள 40க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஒரு சில ஊராட்சிகளில், இடம் தேர்வு முடிந்து பேஸ்மெண்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது மீண்டும் பணிகள் வேகமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் கீழ் காணும் ஊராட்சிகளில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
காரமடை ஒன்றியம்: பெள்ளாதி, சிக்கரம்பாளையம், ஓடந்துறை கெம்மாரம்பாளையம், தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, இரும்பொறை.
மதுக்கரை ஒன்றியம்: பாலத்துறை, வழுக்குப்பாறை,
பெ.நா.பாளையம் ஒன்றியம்: 22.நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பிளிச்சி
தொண்டாமுத்தூர் ஒன்றியம்: நரசிபுரம், மாதம்பட்டி, இக்கரைபோலுவம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், தேவராயபுரம்.
சூலூர் ஒன்றியம்: அரசூர், கணியூர், முத்துக்கவுண்டன்பதூர், கலங்கல்.
சுல்தான்பேட்டை ஒன்றியம்: பச்சாபாளையம், போகம்பட்டி, செலக்கரிச்சல், வதம்பச்சேரி.
அன்னூர் ஒன்றியம்: அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னத்தூர், பொகலூர், குப்பனூர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம்: கீரணத்தம், கொண்டையம் பாளையம்.
ஆனைமலை ஒன்றியம்: அங்கலக்குறிச்சி, கரியன்செட்டிபாளையம்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம்: ராசக்காப்பாளையம், கிட்டசூரம்பாளையம், தாளக்கரை, ஆச்சிப்பட்டி, ராமபட்டினம்.
கிணத்துக்கடவு ஒன்றியம்: முள்ளுப்பாடி, கோவில்பாளையம், சூலக்கல், வடபுதூர், வடசித்தூர், வரதனூர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்: ஊஞ்சவேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரப்பாளையம், மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம்.