கோவை: கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் நாள்தோறும் சுமார் 200 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இதனிடையே கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அவர்களின் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் சுமார் 4 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சிவனந்தா காலனி, பீளமேடு தனியார் பள்ளி கூடம் உள்பட 5 இடங்களில் கூடுதலாக 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்படாது.
மேலும், மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று மரணத்தை குறைக்கும் வகையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வேறு ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் டிரைஏஜி பரிசோதனை மையம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்து அவர்களை இ.எஸ்.ஐ. அனுப்புவதா அல்லது கொடிசியா கொரோனா சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்புவதா என்று முடிவு செய்யப்படும்.
அதேபோல, கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் எந்தெந்த தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இந்த பகுதியில் மருத்துவ முகாம்களை நடத்தி கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, எதனால் இந்த பகுதியில் அதிக தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிவது உள்ளிட்டவை மேற்கொள்ள உள்ளோம். இதன்மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.