கோவை: கோவை மதுக்கரை அருகே சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசு கலந்த புகையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக, கூறி 50க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள பெண்கள் அந்த தொழிற்சாலையின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக, அதன் சுற்றுப்பகுதியில் வாழும் மக்களுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சிமென்ட் தொழிற்சாலையின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொழிற்சாலை ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலத்திலும், இந்த சிமெண்ட் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசு கலந்த புகை அருகில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் படர்வதாக குற்றம்சாட்டினர்.
மேலும், இது தொடர்பாக சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தொழிற்சாலை நிர்வாகத்திடம், இது குறித்து பேச குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலை அலுவலகத்திற்கு சென்ற போது, அவர்களை தொழிற்சாலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.இதனையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார், இரு தரப்பினரிடையேயும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, தொழிற்சாலை நிர்வாகம் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும், தொடர்ந்து மாசு கலந்த புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதேபோல, சிமெண்ட் தொழிற்சாலையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர், இங்கு பணிபுரிந்து வருவதால், அவர்கள் தொழிற்சாலையிலிருந்து தூசு வெளியேறும் விவகாரத்தில் புகார் அளிக்க முன்வருவதில்லை, என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில், அரசியல் தலையீடு ஏதுமின்றி சுமூகமான தீர்வு காண முயன்று வருவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.