கோவை: கோவை மாவட்டம், ஜெ கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக சரிதாவை, சாதி ரீதியாக இழிவுபடுத்திய பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்யக்கோரி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெ கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக சரிதா என்பவர் இருந்து வருகிறார். பட்டியல் இனத்தை சேர்ந்த இவரை, அப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அவர் மீது SC/ST சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், சரிதாவை சாதி ரீதியாக இழிவுபடுத்திய பாலசுப்பிரமணியத்தை கைது செய்யக் கோரி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலசுப்பிரமணியம், அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் துறையினர் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும், சரிதாவிற்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவ்வமைப்பினர், தெரிவித்தனர்.