கள்ளக்காதலியுடன் இருந்த போது வீடு பூட்டபட்டதால்; அவமானம் தாங்காமல் பேருந்து நடத்துநர் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்காதலியுடன் இருந்த போது வீடு பூட்டபட்டதால்; அவமானம் தாங்காமல் பேருந்து நடத்துநர் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவை மாவட்டம், சூலூர், பள்ளபாளையம் நஞ்சப்பத்தேவர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன், கிருஷ்ணகுமார் (23), தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.

கிருஷ்ணகுமார், பள்ளபாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நண்பர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு, மகாலிங்கம் என்பவர் தனது மனைவிரங்கநாயகி உடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், மகாலிங்கம் என்பவரது வீட்டில் கிருஷ்ணகுமார்நிர்வாண நிலையில்,தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் வந்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, மணிகண்டன் வீட்டில் குடியிருக்கும் மகாலிங்கத்தின் மனைவி ரங்கநாயகி உடன் கிருஷ்ணகுமாருக்கு தகாத உறவு இருந்தது தெரியவந்தது. அவ்வாறு, தகாத உறவில் அவர் ஈடுபட்டிருந்தபோது உறவினர்கள் வீட்டை பூட்டியதும், அப்போது ரங்கநாயகி மட்டும் வெளியே வந்த நிலையில், கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டார்.

இதனால், அவமானம் அடைந்த கிருஷ்ணகுமார் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற் கூராய்விற்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...