ஜாதகப்படி இப்போதே திருமணம் செய்ய வேண்டும் என்றதால்,மேட்டுப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; மூன்று பேர் கைது

ஜாதகப்படி, இப்போதே திருமணம் செய்ய வேண்டும் என்றதால், மேட்டுப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; மூன்று பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த விவகாரத்தில், மாப்பிள்ளை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம், அன்னூர் ரோடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவரின் 15 வயதுடைய மகள், 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஜூன் மாதம் 24ஆம் தேதி, தனது மகளை

பொங்கலூர், நஞ்சப்ப கவுண்டன்புதூரைச் சேர்ந்த சந்திரசேகர் (36) என்பவருக்கும்

கட்டாய திருமணம் செய்து

வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த அந்த மாணவி தனது கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது உறவினர் ஒருவருடன், நேற்று சிறுமுகை போலீஸ் நிலையத்திற்கு வந்து, தனது சட்ட விரோத திருமணத்தை குறித்து,

ஒரு புகார் மனுவை அளித்தார்.

அதில், "எனது பெற்றோர் எனக்கு ஜாதகம் பார்த்து வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும் எனக் கூறி எனது விருப்பமில்லாமல், கட்டாய திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

எனக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை. கணவர் வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. தொடர்ந்து, நான் படிக்க ஆசைப்படுகிறேன், எனவே என்னை காப்பகத்தில் ஒப்படையுங்கள்", என்று கூறப்பட்டு இருந்தது.

அவரது, புகாரின் பேரில், போலீசார் குழந்தை திருமணதடைச் சட்டத்தின் கீழ், பெண் வீட்டார் மூன்று பேர், மாப்பிள்ளை வீட்டார் மூன்று பேர், என ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்த சந்திரசேகர் மற்றும் அவருடைய உறவினர், இருவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், போலீசார் அந்த மாணவி, மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...