நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,473 ஆக உயர்ந்துள்ளது.
இதில் கூக்கல்தொரை குருமுடி, உயிலட்டி பகுதியில் 58 பேருக்கும், உதகை 8 பேர், தாந்தநாடு பகுதியில் 5 பேருக்கும், போர்த்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 10 பேர் நோய் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 1,080 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 384 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, நீலகிரியில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் இதுவரை கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.